பெட்ரோல் விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது - அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம்

பெட்ரோல் விலையை குறைப்பதன் மூலம் மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காது என்றும் டீசல் விலையை குறைப்பதன் மூலம் மட்டுமே மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என அகில இலங்கை மாகாண பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் உட்பட மேலும் பல சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.
டீசல் விலையை குறைக்க வாய்ப்புள்ள நிலையில் பெட்ரோல் விலையை மட்டும் குறைப்பது நியாயமானதல்ல என அகில இலங்கை மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான சிறுவர் போக்குவரத்துக் கழகத்தின் தலைவர் ருவன் பிரசாத், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.
எனவே சகல தரப்பு பொதுமக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் வகையில் டீசல் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.



