யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரை பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
Kanimoli
2 years ago

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரை பகுதியில் 217 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இச் சம்பவம் இன்று (03) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற இராணுவத்தினர், கரையொதுங்கி வாடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 217 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.
இவ்வாறு மீட்கபட்ட கஞ்சா பொதிகளை வல்வெட்டித்துறை காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.



