கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

Mayoorikka
1 year ago
கடற்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு ஒக்டோபர் 3 திங்கட்கிழமை பிற்பகல் 02.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 – 3.0 மீற்றர் வரையில் அலைகள் அதிகரித்து வீசுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனால், மேற்கண்ட கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும்.

காலியிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2.0 – 2.5 மீற்றர் வரையில் அலைகள் அதிகரித்து வீசுவதுடன் பலத்த காற்று மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை வீசும் சாத்தியம் காணப்படுகின்றது. எனவே மேற்கண்ட கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும்.

இதனால், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும், காலியிலிருந்து கொழும்பு ஊடாக மன்னார் வரையான கடற்பரப்புகளிலும் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.