பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் மாயம் பொலிஸார் தீவிரம்

Kanimoli
2 years ago
பேராதனை பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு மாணவர் மாயம் பொலிஸார் தீவிரம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்று வந்த மற்றுமொரு மாணவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் மூன்றாம் ஆண்டில் பயின்று வந்த மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

கடவத்தை, கணேமுல்ல பகுதியை சேர்ந்த மாணவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவர் பேராதனை பல்கலையின் விடுதியிலிருந்து நேற்றிரவு வெளியேறிய நிலையில் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சில தினங்களுக்கு முன்னதாக கலை பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் மகாவலி கங்கையிலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!