தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக சட்டரீதியான மது பாவனை சுமார் நாற்பது வீதத்தால் குறைந்துள்ளது

Kanimoli
1 year ago
தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக சட்டரீதியான மது பாவனை சுமார் நாற்பது வீதத்தால் குறைந்துள்ளது

தொடர்ச்சியான விலை அதிகரிப்பு காரணமாக சட்டரீதியான மது பாவனை சுமார் நாற்பது வீதத்தால் குறைந்துள்ளதாக கலால் ஆணையாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மதுபான விற்பனை 25 முதல் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சட்டரீதியாக மதுபானங்களின் விலையேற்றம் காரணமாக மக்கள் கசிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் கலால் வருமானம் 185 பில்லியன் ரூபாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந்த இலக்கை அடைவது கடினமாகவே உள்ளது.

தற்போது அதிகளவில் விற்பனை செய்யப்படும் சட்டபூர்வ மதுபானமான கேலின் (எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்) விலை 710 ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.