துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் சென்று வந்த இடம் தொடர்பில் சகோதரன் சாட்சி

Kanimoli
2 years ago
 துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் சென்று வந்த இடம் தொடர்பில் சகோதரன் சாட்சி

தங்கோவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் சென்று வந்த இடம் தொடர்பில் சகோதரன் சாட்சியமளித்தார்.

அனுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியில் வழிபாடு செய்த பின்னர் ஞானக்காவின் தேவாலயத்திற்கு சென்ற பூஜை நடத்திவிட்டு வீடு திரும்பும் போது தனது சகோதரி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக உயிரிழந்த இரேஷா ஷியாமலியின் மூத்த சகோதரர் பிரசாத் குமார தெரிவித்துள்ளார்.

வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் நேற்றைய தினம் சாட்சியமளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

நிட்டம்புவ பொலிஸாரினால் கொள்ளைக் கும்பலை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது, கலேபிந்துவெவ பிரதேசத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் குண்டு பட்டமையால் அதில் பயணித்த இரேஷா என்ற 29 வயதான இளம் பெண் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையை வத்துபிட்டியல வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி ரமேஷ் அழகியவன்ன மேற்கொண்டார்.

நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!