8,000 புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை!
Mayoorikka
2 years ago

ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தியதன் காரணமாக ஏற்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பவும் கல்வித்தரத்தை உயர்த்தவும் 2023 இல் 8,000 புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு 8,000 ஆசிரியர்கள் ஓய்வுபெறவுள்ளதாகவும், இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சு ஏற்கனவே விண்ணப்பங்களை கோரியுள்ளதாகவும், திறன் பரீட்சையின் அடிப்படையில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.



