மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை: கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த பொலிஸ்

Prathees
1 year ago
மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை: கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்த பொலிஸ்

சட்டவிரோத மீன்பிடியை வெளியேற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அலுவலகத்திற்கு முன்பாக இன்று (05) மூன்றாவது நாளாகவும் முல்லைத்தீவு மீனவர்கள் குழு போராட்டம் நடத்தியது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் மக்களை விரட்டியும், அத்துமீறி மீன்பிடிக்கும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கோரியும் முல்லைத்தீவு மீனவர்கள் குழுவினர் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, ​​எதிர் கருத்துடைய மற்றுமொரு மீனவர் குழுவிற்கு இடையில் இன்று ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அமைதியின்மை ஏற்பட்டது.

முல்லைத்தீவு பொலிசார் வந்து இருதரப்பு மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த கடுமையாக முயற்சித்த போதிலும் அது தோல்வியடைந்ததால் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை விரட்டியடித்ததுடன், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்து நிலைமையை கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று. .

பின்னர் இருதரப்பு மீனவர்களின் பிரதிநிதிகளும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரைச் சந்தித்துப் பேசியதையடுத்து, மாவட்டச் செயலாளரின் தலையீட்டினால் நிலைமை தற்காலிகமாகச் சுமூகமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, போராட்டத்தின் போது முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகையும் மீனவர்கள் குழுவொன்று தீ வைத்து எரித்துள்ளது.