பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கமாட்டார்கள்!
Mayoorikka
2 years ago
2022 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவோருக்கான விண்ணப்ப அழைப்பு முடிவதற்குள் கடந்த வருட உயர்தர மற்றும் பொதுத் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டோருக்கான கட்டணங்களைச் செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கட்டணம் செலுத்தாததால் இம் முறை பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கமாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.