பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களினால் பொது மக்கள் வரிச் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது - லக்ஷ்மன் கிரியெல்ல
இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களினால் பொது மக்கள் வரிச் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியவர்களின் ஆதரவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டை முன்னேற்ற முடியாதென லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இன்றைய பொருளாதார நிலைக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவினர் பொறுப்பு கூற வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல வலியுறுத்தியுள்ளார்.
இதனால் சர்வதேச அமைப்புக்களின் உதவியை சிறிலங்கா அரசாங்கம் ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை உடனடியாக அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல நிறுவனங்களுக்கு 800 பில்லியன் ரூபா வரையிலான வரி நிவாரணத்தை வழங்கியுள்ளது எனவும் தற்போது மக்கள் மீது வீணான வரி சுமையை சுமத்துகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.