அமைச்சரவையை ஸ்தாபிக்க உள்ளதாக ஜனாதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
Kanimoli
2 years ago
அடுத்த வருடத்திற்கான வரவு - செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க உள்ளதாக ஜனாதிபதி திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இது குறித்து எமது அரசியல் ரீதியான தீர்மானத்தை அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தற்காலிக அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் அண்மையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் அரசாங்கத்தில் ஒன்றிணைய இணக்கம் தெரிவித்துள்ளதால் நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க முடியாது என ஜனாதிபதி குறிப்பிட்டார்.