உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு – புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ளார் ஜனாதிபதி!
Mayoorikka
2 years ago
உள்நாட்டு பொறிமுறை ஊடான தீர்வு தொடர்பாக புலம்பெயர் தமிழ் மக்களுடன் கலந்துரையாட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீதி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பு ஒன்றில் இதனை நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக விரைவில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் இலங்கை ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விவாதம் வெற்றியடையும் பட்சத்தில், உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றும் விஜயதாச ராஜபக்ச கூறியுள்ளார்.