பொருளாதார சீர்திருத்தம் குறித்து இலங்கை – சர்வதேச நாணய நிதியம் பேச்சு
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுராவை வொஷிங்டனில் சந்தித்துள்ளார்.
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசாங்கம் அமுல்படுத்திய பொருளாதார சீர்திருத்தங்களில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி நாடுகளுடன் நெருக்கமாக செயற்படுவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.
வொஷிங்டனில் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை சந்தித்த போது உலக வங்கியின் தெற்காசியாவிற்கான உப தலைவர் மார்ட்டின் ரைசர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள் பலரை சந்தித்துள்ளனர்.