ஆயிரம் போதை மாத்திரைகளுடனும் ஒரு தொகை ஹெரோயினுடனும் போதை வியாபாரிகள் நால்வர் கைது
Kanimoli
2 years ago
ஆயிரம் போதை மாத்திரைகளுடனும் ஒரு தொகை ஹெரோயினுடனும் போதை வியாபாரிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் யாழ்ப்பாண நகர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் யாழ் நகர் பகுதியில் உள்ள மூன்று புடவைக்கடைகளில் வேலை செய்து கொண்டு போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு அந் நபர்களை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.