தாமரை கோபுரத்தின் மாத வருமானம் இவ்வளவா?வெளிவந்த தகவல்

Kanimoli
2 years ago
தாமரை கோபுரத்தின் மாத வருமானம் இவ்வளவா?வெளிவந்த தகவல்

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்பட்டு வரும் தாமரை கோபுரம் மக்களிடன் பார்வைக்கு திறக்கப்பட்ட நாள் தொடங்கி ஒரு மாத காலத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதனை பார்ப்பதற்காக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து 165,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாகவும் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

பார்வையாளர்கள் வாங்கும் டிக்கெட்டுகள் மற்றும் அதில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்படும் வசதிகள் மூலம் குறித்த வருமானம் கிடைத்துள்ளதாக தலைமை நிர்வாக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்ட முதல் நாளான செப்டம்பர் 15 ஆம் திகதி, 21 வெளிநாட்டவர்கள் உட்பட 2612 பேர் பார்வையிட்டுள்ளனர்.

இதன்மூலம் 15 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!