அமெரிக்காவில் IMF பிரதிநிதிகளை சந்தித்தார் நிதி இராஜாங்க அமைச்சர்
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்ட போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுராவுடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
உத்தேச விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கையின் தற்போதைய பொருளாதாரப் போக்குகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடல்களில் கலாநிதி சந்திரநாத் அமரசேகர, நிதி அமைச்சின் செயலாளர், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர்.