பசில் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளார் - சிறிபால கம்லத்
Kanimoli
2 years ago
வெளிநாட்டில் இருக்கும் பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் கட்சியை வழிநடத்துவதாகவும் நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை கிரித்தலே பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைவராக இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப்பட்டமையும் இங்கு இடம்பெற்றது.
முன்னதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பொலன்னறுவை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக பதவி வகித்தமை குறிப்பிடதக்கது.