ஐக்கிய தேசிய கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் “இன்னும் எந்தவிதமான இணக்கப்படும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை” - பொதுஜன பெரமுன
ஐக்கிய தேசிய கட்சியுடன் தேர்தல் கூட்டணி தொடர்பில் “இன்னும் எந்தவிதமான இணக்கப்படும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை” என அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன் போது ஐக்கிய கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமா? அதற்கான இனக்கப்பாடு ஏற்பட்டுள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே மொட்டுக் கட்சி செயலாளர் சாகர காரிய வசம் இவ்வாறு பதிலளித்தார்.
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கென கொள்கை ஒன்று உள்ளது. அந்தக் கொள்கையின் அடிப்படையில் எமது பயணம் தொடரும்.
எமது பொருளாதாரக் கொள்கையுடன் உடன்படக்கூடிய கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். மாறாக செயல்படும் கட்சிகளுடன் பயணிப்பதற்கு இனி தயாரில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை நிர்வகிப்பதற்கு நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம் அவரின் தற்போதைய நிலைப்பாடுகளை நாம் ஆதரிக்கின்றோம்.
பொருளாதாரக் கொள்கை தொடர்பில் வேறுபாடு உள்ளது. அதில் இணக்கம் காணப்பட்டால் இணைந்து பயணிப்பதில் சிக்கல் இருக்காது” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.