அமரகீர்த்தி அத்துகோரளவின் குடும்பத்திற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்க அனுமதி!
Mayoorikka
2 years ago
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவிற்கு 10 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நிட்டம்புவில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில், கொல்லப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.