முக்கிய அத்தியாவசிய இரண்டு உணவுப் பொருட்கள் விலை குறைப்பு!

Mayoorikka
2 years ago
முக்கிய அத்தியாவசிய இரண்டு உணவுப் பொருட்கள் விலை குறைப்பு!

கொழும்பு – புறக்கோட்டை மொத்த சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பனவற்றின் விலை குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, கடந்த வாரம் 400 ரூபாயாக இருந்த ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 25 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பருப்பு 375 ரூபாயாக குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 15 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி 235 ரூபா என்ற அடிப்படையில் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!