மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதம்
Kanimoli
2 years ago
ஹட்டன் குடாகம பகுதியில் வீடொன்றின் மீது இன்று (21) காலை மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் அந்த வீடு பாரிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியில் பெய்து வரும் கடும் மழையினால் வீட்டின் பின்புறமுள்ள மண்மேடு சரிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் வீட்டின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்துள்ளது.
குறித்த மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும், வீட்டில் வசிப்பவர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.