பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

Prathees
2 years ago
பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு

பாராளுமன்ற விவாதங்களை காண பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வுகள் நடைபெறும் நாட்களில் பாடசாலை மாணவர்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தருவதற்கும் விவாதங்களை பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு அனுமதியளித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சார்ஜன்ட் நரேந்திர பெர்னாண்டோ முன்வைத்த பிரேரணைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்படி, பாராளுமன்ற அலுவகத்தில் உள்ள பொதுக் கேலரியில் இருந்து பாராளுமன்ற விவாதங்களை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் நிலைமை மற்றும் பாதுகாப்புக் காரணங்களால், கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி முதல் நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும், நாடாளுமன்ற அமர்வு நாட்களில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!