வரி தொடர்பில் மக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்: கலாநிதி சாந்தயணன் தேவராஜன்
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களால் வரி சுமக்கப்படுகிறது, எனவே வரி தொடர்பில் முடிவெடுக்கும் செயல்பாட்டில் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம் என்று கலாநிதி சாந்தயணன் தேவராஜன் கூறியுள்ளார்.
வரிக் கொள்கைகளை பொதுமக்களால் புரிந்து கொள்ள முடியாத சிக்கலான விஷயமாகக் கருதுவதை அரசாங்கம் அகற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலும் மற்றும் மற்ற நாடுகளிலும் பார்த்த உண்மையான பிரச்சனை என்னவென்றால், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள், வரி தீர்மானங்களை மூடிய அறைக்குள் இருந்து எடுக்க வேண்டும் என நினைப்பதாக தேவராஜன் தெரிவித்துள்ளார்.
இந்த வாரம் வெரைட் ரிசர்ச்(Verite Research)நடத்திய வெபினாரில் உரையாற்றிய முன்னாள் உலக வங்கியின் மூத்த இயக்குநர், வரிக் கொள்கை அல்லது வரவு செலவு கொள்கை ரொக்கெட் அறிவியல் அல்ல என்று வலியுறுத்தினார்.
இந்தநிலையில் வரி தீர்மானங்களை அதிநவீன பொருளாதார வல்லுநர்கள் கையாள வேண்டும். இது மிகவும் நேரடியானது மற்றும் இது மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். ஏனெனில் இது அவர்களின் வாழ்க்கையைப் பற்றியது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
புதிய வரிக் கொள்கையின் வர்த்தமானியைத் தொடர்ந்து, பொது மக்களும் தொழில்துறையினரும் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், அதிக விகிதங்களை உள்வாங்க முடியவில்லை என்று தங்கள் கவலைகளை வெளிப்படுத்தினர். அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே இலங்கையில் பிரச்சினை என்பது திறமையின்மையோ அல்லது ஆலோசகர்களின் பற்றாக்குறையோ அல்ல. இது பொறுப்புக்கூறல் இல்லாமையாகும் என கலாநிதி தேவராஜன் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில், பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல் முடிவெடுக்க முடியும் என்று அரசாங்கம் கருதுகிறது.
இதுவே உண்மையில் பல தசாப்தங்களாக நாட்டின் கசப்பான விடயமாக உள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டவை மட்டுமல்ல, அது நடைமுறைப்படுத்தப்படும் விதமும் மிகவும் கவனமாக ஆராயப்படும் என்று பொதுமக்கள் அரசாங்கத்தை எச்சரிக்க வேண்டும். அத்துடன் "மக்கள் அரசாங்கத்திடம் பொறுப்புக் கூறலை வலியுறுத்த வேண்டும் என்றும் தேவராஜன் கூறியுள்ளார்