நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் பதவி விலக வேண்டிய நிலை
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றனர்.
இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாவதை தடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட சட்டம் காரணமாக, இரட்டை குடியுரிமைக் கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தொடர முடியாது தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் சாசனத்திற்கு மதிப்பளித்தால் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
22 வது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் நிறைவேற்றப்பட்டமை காரணமாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபரும், அமெரிக்க குடியுரிமையை கொண்டவருமான பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினராக வர முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.