ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார்: டலஸ் அழகப்பெரும
தேர்தலில் தோற்றாலும் அரசியலமைப்பின் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்தன கூட நினைத்திருக்க மாட்டார் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர், 44 வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்கிய போது, இவ்வாறான சம்பவம் நிகழும் என ஜே.ஆர்.ஜயவர்தன எண்ணியிருக்க மாட்டார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 44 வருடங்களின் பின்னர் தேர்தலில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற ஜே.ஆரின் மருமகன், பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பதவியேற்க அரசியலமைப்பே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வகையில் நாட்டு மக்களுக்கு நட்புறவான அரசியலமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.