நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பலர் பாதிப்பு
Mayoorikka
2 years ago
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் 1,296 குடும்பங்களைச் சேர்ந்த 4,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 31 குடும்பங்களைச் சேர்ந்த 116 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.