நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள வேண்டாம்: அரசாங்கம் அதிரடி
Mayoorikka
2 years ago
கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என அரசு நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடுவது என்பது பல நிறுவனங்களில் நீண்ட காலமாக நடந்து வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது பொருத்தமானதல்ல என அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆகவே அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.