மரத்தில் மோதிய டிஃபெண்டர் வாகனம்: இராணுவ கப்டன் பலி

Prathees
2 years ago
மரத்தில் மோதிய டிஃபெண்டர் வாகனம்:  இராணுவ கப்டன் பலி

வெலிகந்த முத்துவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ கப்டன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
திருகோணமலை இராணுவ முகாமில் இருந்து மதுரு ஓயா நோக்கி பயணித்த இராணுவ டிஃபென்டர் வாகனம் மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டிஃபென்டர் வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு இராணுவத்தினர் காயமடைந்து வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தளை மில்லவன பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய கப்டன் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!