பிரியமாலிக்கு ஆதரவான 6 நடிகைகளிடம் விசாரணை
500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியுடன். இணைந்து பணக்காரர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 6 நடிகைகளிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆறு நடிகைகளையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன.
திலினி பிரியமாலி என்ற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இந்த ஆறு நடிகைகளும் அவரிடமிருந்து பல லட்சம் பணம் மற்றும் பல்வேறு பெறுமதியான பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பல்வேறு பணக்கார தொழிலதிபர்கள், தொழில் அதிபர்கள், உயரதிகாரிகளை மிரட்டி பணம் பெறுவதற்காக இந்த நடிகைகளை திலினி பிரியாமாலி பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
அவர்கள் பணக்காரர்களுடன் உடலுறவு வைத்து ரகசியமாக வீடியோ எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பணக்காரர்களிடம் பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் சில நடிகைகள் பணக்காரர்களை போனில் அழைத்து பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் நடந்து கொண்டு ஆடியோ டேப்களை சமூகத்தில் வெளியிடுவோம் என மிரட்டி பணம் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
இந்த நடிகைகளிடம் தீவிர விசாரணை தொடங்கியுள்ளதுடன், பல்வேறு பணக்காரர்களை மிரட்டி அவர்கள் சம்பாதித்த பணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.