தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்

Kanimoli
2 years ago
தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்

யாழ். வடமராட்சி - புலோலி, சிங்கநகர் பகுதியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோட்டக்கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இரு இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருவரது சடலத்தின் மீதும் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்திய போது மதுசாரம் மற்றும் ஐஸ் போதைப்பொருளை பாவித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

பருத்தித்துறை, புலோலி சிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பெருநாளான நேற்று முன்தினம் இந்தத் துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரி சட்ட மருத்துவ வல்லுநர் க.வாசுதேவா முன்னிலையில் இருவரது சடலமும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!