கனடாவில் இடம்பெற்ற தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி!

Mayoorikka
2 years ago
கனடாவில் இடம்பெற்ற தேர்தலில் நான்கு தமிழர்கள் வெற்றி!

கனடாவின் ஒன்ராறியோ மாநகர, நகர, உள்ளூராட்சி, கல்விச்சபை உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 

இதில் நான்கு தமிழர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதில் இரண்டு தமிழர்கள் இரண்டாவது தடவையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். ஸ்காபரோ வடக்கு தொகுதியில் கல்விச் சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட யாழினி ராஜகுலசிங்கம் வெற்றி பெற்றார். 

ஸ்காபரோரூச் பார்க் தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்ட அனு சிறீஸ்கந்தராஜா வெற்றி பெற்றார். 

ஸ்காபரோ மத்தி தொகுதியில் கல்வி சபை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட நீதன் சாண் அமோக வெற்றி பெற்றார்.

மார்கம் நகரில் வோட் – 7 கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட யுவனீற்ரா நாதன் அமோக வெற்றி பெற்றார். 

இதேவேளை, வெற்றிபெற்ற நான்கு தமிழர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!