மேலதிக வரிச் சட்டமூலம் தொடர்பான ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு
Mayoorikka
2 years ago
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேலதிக வரிச் சட்டமூலம் தொடர்பான ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ். துரைராஜா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.