ரணில் ஜெயவர்தன பதவி விலகினார்
பிரித்தானியாவின் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய அலுவல்கள் செயலாளராக கடமையாற்றிய ரணில் ஜயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ரிஷி சுனக்கிடம் சமர்ப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் அமைச்சரவையில் மாற்றம் செய்து வருகிறார். ரணில் ஜயவர்தனவும் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது ராஜினாமாவால் காலியாக உள்ள சுற்றுச்சூழல் செயலாளர் பதவிக்கு பிரித்தானியாவின் முன்னாள் சுகாதார செயலாளராக இருந்த தெரேசா காஃபியை பிரதமர் ரிஷி சுனக் நியமித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் பிரதமர் லீஸ் ட்ரஸ், கிழக்கு ஹாம்ப்ஷயரை பிரதிநிதித்துவப்படுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட ரணில் ஜயவர்தனவை சுற்றாடல் செயலாளராக நியமித்தார்.