யாழ்.நகரில் 6000 கிலோ அழுகிய புளி வைத்திருந்த கடைக்கு சீல்
Prathees
2 years ago
யாழ்.நகரில் மனித பாவனைக்கு தகுதியற்ற காலாவதியான 6000 கிலோ புளிகள் வைத்திருந்தகடைக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
யாழ்.பொதுசுகாதார பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் யாழ்.நகரில் ஜும்மா பள்ளி வீதியில் அமைந்துள்ள குறித்த கடையை பரிசோதித்ததில் கடையின் களஞ்சியசாலையில் இருந்த தொடர்புடைய புளி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாவனைக்கு தகுதியற்றது என தெரியவந்துள்ளது.
கடைக்கு சீல் வைத்து கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.