சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள்: தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
Mayoorikka
2 years ago
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு சிறுவர்கள் தொடர்பாக, மாதம் ஒன்றிற்கு அறுநூறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம், சிறுவர்கள் தொடர்பாக அதிக முறைப்பாடுகள் அதாவது சுமார் 10,000 முறைப்பாடுகள் மேல் மாகாணத்தில் இருந்தே பதிவாகியுள்ளன.
அந்த முறைப்பாடுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அந்தந்த பகுதியின் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக உடல் குறைபாடுகள், மன நிலைகள் மற்றும் குழந்தைகளுக்கான நிதி நெருக்கடிகள் தொடர்பான முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெறுவதாக அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.