பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
Kanimoli
2 years ago
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் பயிற்சி பெறும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பாலியல் சேட்டை புரிந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின்படி,
சந்தேக நபரான சார்ஜன்ட், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திலிருந்து வேறு பொலிஸ் சோதனை சாவடிகளுக்கு மாற்றப்பட்டதாகவும், விசாரணையின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சேவையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதேவேளை சந்தேக நபரான பொலிஸ் சார்ஜென்டின் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதனையடுத்து கைதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.