கஞ்சன விஜயசேகரவிற்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு
Kanimoli
2 years ago
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகரவிற்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் இடம்பெற்றதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சந்திப்பு குறித்து அமைச்சர் கஞ்சன விஜயசேகரவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது நாட்டில் மேற்கொள்ளப்படவேண்டிய புதுப்பிக்கத்தக்க சக்தி, மின் உற்பத்தியில் மேம்பாடு, எரிபொருள் பயன்பாட்டிற்கான மாற்று திட்டங்கள், உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது