ஆயுதங்களுடன் வீடு ஒன்றில் கொள்ளையடித்த 4 பேர் கைது
நான்கு பேர் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் வீட்டினுள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கிருந்தவர்களை பயமுறுத்திய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த 10,000 ரூபாயை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குருவிட்ட கலஹிட்டிய பிரதேசத்தில் நேற்று (28) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குருவிட்ட பொலிஸார், கலஹிட்டிய பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான காரொன்றை சோதனையிட்டதில், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்ற நான்கு சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
அதன்படி, உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், காரை சோதனையிட்ட போது, கருங்கல் ரக துப்பாக்கி, வாள், வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு மற்றும் திருடப்பட்ட 8,000 ரூபா பணமும் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30, 31 மற்றும் 40 வயதுடையவர்கள்.