கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கின்றது அஸூர் !
Mayoorikka
2 years ago
ரஷ்யாவின் மிகப்பெரிய பட்டய விமான நிறுவனமான அஸூர் நவம்பர் 2 ஆம் திகதி முதல் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இந்த விமானம் சென் பீட்டர்ஸ்பேக், ரஸ்னோயாஸ்க் மற்றும் நொவோஸ்பிர்ஸ்க் ஆகிய இடங்களில் இருந்து 10 நாட்களுக்கு ஒருமுறை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அஸூர் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மொஸ்கோவில் இருந்து வாரத்திற்கு இரண்டு முறை சேவையில் ஈடுபடும் என ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் தெரிவித்துள்ளார்.