பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை
Prathees
2 years ago
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் பிரதமர் பதிலளித்தார்.
கண்டி மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் தினேஷா குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.