10 தமிழ் எம்.பி.க்கள் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களா?
Kanimoli
2 years ago
இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வகிக்க முடியாது என்ற சரத்து அடங்கிய 22 ஆம் அரசியலமைப்புத் திருத்தம் கடந்த 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த விசாரணைக்குப் பிறகு விரைவில் அரசிடம் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அரச உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைக் குடியுரிமையுடன் சுமார் பத்து எம்.பி.க்கள் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் அனேகமாக இரட்டைக் குடியுரிமை பெற்ற 10 தமிழ் எம்.பி.க்கள் எனவும் கனடா மற்றும் நோர்வே பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது