விவசாயிகள் பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் - கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

Kanimoli
2 years ago
விவசாயிகள் பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் - கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நீங்கி மக்கள் தமது நிம்மதியான வாழ்விற்கு செல்வதற்கு விவசாயிகள் பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார்.

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டில் விவசாயிகளுக்கான பயறு மற்றும் உழுந்து ஆகிய தானியங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று(28) மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்றது இதன்போது கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் மேலோங்க வேண்டுமெனில் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

விவசாயத்தை மேன்மைப்படுத்துகின்ற உலக நாடுகள் இன்று நவீன விவசாய முறைகளை கையாண்டு குறைந்த மூலதனத்துடன் கூடிய விளைச்சலைப் பெறுகின்றன. அதேபோன்று எமது நாடும் நவீன விவசாய முறையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

எமது நாடானது முற்றிலும் விவசாயத்திற்கு உகந்த ஒரு நாடாகும். சகல இயற்கை வளங்களையும் விவசாயத்திற்கான சாதகமான காலநிலையையும் கொண்டுள்ளது. இது பெறும் கொடையாகும்.

எனவே விவசாயம் நல்லதொரு நிலையை அடையும் போது எமது நாட்டின் பொருளாதாரம் தன்னிறைவை எட்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.”என தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வின் போது மன்னார் மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகங்களை உள்ளடக்கி தெரிவு செய்யப்பட்ட சுமார் 850 பயனாளிகளுக்கான விதைப்பதற்கு உகந்த உழுந்து மற்றும் பயறு ஆகிய தானியங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் இதற்காக மன்னார் மாவட்டத்திற்கு 8.7 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், விவசாய திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!