பஙகளாதேஷ் வங்கியின் அறிவிப்பால் இலங்கையின் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்புக்கு மேலும் ஒரு அடி

Kanimoli
1 year ago
பஙகளாதேஷ் வங்கியின் அறிவிப்பால் இலங்கையின் மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்புக்கு மேலும் ஒரு அடி

பங்களாதேஷின் மத்திய வங்கியான பங்களாதேஷ் வங்கி, அந்த நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளையும் பணக் கொடுப்பனவுகளை மட்டுமே மேற்கொள்ளுமாறும், சர்வதேச கொடுப்பனவு தீர்வு நுழைவாயிலின் கீழ் இலங்கை வங்கிகளுடன் கடன்களை வழங்கலை மேற்கொள்ளவேண்டாம் என்றும் உத்தரவிட்டதை அடுத்து, இந்த வாரம் இலங்கையின் ஆபத்தான குறைந்த வெளிநாட்டு கையிருப்;பை சந்தித்துள்ளது.
இலங்கையின் குறைந்த அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் இலங்கையின் மத்திய வங்கி, பங்களாதேஷ் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வங்கிகள் மூலம் பணம் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் கோரியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய கிளியரிங் யூனியன்  அமைப்பு மூலம் இலங்கை வங்கிகளுடன் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்குமாறு பங்களாதேஷ் வங்கி, கடந்த புதன்கிழமை சுற்றறிக்கை மூலம் நாட்டின் வங்கிகளுக்கு உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கை குறித்து இலங்கை வங்கிகளுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக இலங்கை மத்திய வங்கி அறிவிக்கவில்லை.
அத்துடன், இது தொடர்பில் மத்திய வங்கி அதிகாரிகளும் எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.
ஆசிய கிளியரிங் யூனியன்  என்பது ஒரு கொடுப்பனவைச்; செய்வதற்கு மூன்று மாத கால அவகாசம் அல்லது கடன் வழங்கப்படும் ஒரு தளமாக உள்ளது.
எனினும் வெளிநாட்டு  நாணய கையிருப்பு குறைவு காரணமாக, தமது நிலுவைக் கொடுப்பனவுகளை தீர்ப்பதற்கு இலங்கைக்கு அதன் அதிக கால அவகாசம் தேவைப்பட்ட நிலையில், இலங்கை மத்திய வங்கி அதிக காலத்தை கோரியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த கொடுப்பனவுகளை உடனடியாக செலுத்தினால், இலங்கை மத்திய  வங்கியின் வெளிநாட்டு ஒதுக்க கையிருப்பில் குறைவு ஏற்படும் என்;ற நிலையும் உள்ளது என்பது இலங்கை மத்திய வங்கியின் நியாயமாக இருக்கக்கூடும்.
இதேவேளை ஆசிய கிளியரிங் யூனியனில் பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் யுஊரு இல் உறுப்பினர்களாக உள்ளன.
இந்தநிலையில் இந்த திட்டத்தின் ஊடாக இலங்கையுடன் கொடுப்பனவுகளை கையாள்வதை இந்தியா ஏற்கனவே நிறுத்திவிட்டதாக நம்பப்படுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் அளவைப் பொறுத்தவரை இது மிகப் பெரிய அடியாகும் என்றும் வங்கியாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய வெளிநாட்டு கையிருப்பு 1.717 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.