அட்டைகள் இல்லாததால் 6 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேக்கமடைந்துள்ளன

Prathees
2 years ago
அட்டைகள்  இல்லாததால் 6 லட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் தேக்கமடைந்துள்ளன

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக தற்போது 06 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க முடியாதுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த அட்டை தட்டுப்பாடு அடுத்த இரண்டு வாரங்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் மற்றும் புதிதாக சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவோருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.

வழங்கப்பட்ட தற்காலிக உரிமங்களில் ஒரு பகுதியின் செல்லுபடியாகும் காலம் இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் மற்றைய பகுதி அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என்றும் மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!