வெள்ளைப்பிரம்புதினமும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

Kanimoli
2 years ago
வெள்ளைப்பிரம்புதினமும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

வடமாகாண லயன்ஸ் கழகங்களும் யாழ். விழிப்புணர்வற்றோர் சங்கமும் இணந்து நடாத்திய வெள்ளைப்பிரம்புதினமும் விழிப்புணர்வு ஊர்வலமும் இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

குருநகர் சனசமூக நிலைய முன்றலில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ்மாவட்ட விழிப்புணர்வற்றோர் சங்க அலுவலகத்தில் நிறைவுபெற்று அங்கு விழுப்புணர்வற்றோர் சங்கத்தினரின் கலைநிகழ்வுகளும் நடைபெற்றது.

சர்வதேச லயன்ஸ் கழக 301 B 1 இன் ஆளுநரின் ஆலோசகர் லயன் டாக்ரர் கெ. பத்மநாதன் மற்றும் யாழ். விளிப்புணர்வற்றோர் சங்க தலைவர் எஸ் . யோகராஜா ஆகியோரின் இணைத்தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தின் மாவட்ட ஆளுனர் லயன் டாக்ரர் லயன் அனோமா விஜயசிங்க , முன்னாள் ஆளுனர்களின் ஆளுனர்சபைத்தலைவர் லயன் டாக்ரர் தியாகராஜா , முன்னாள் ஆளுனர் டாக்ரர் லயன் லக்ஷ்மன் விஜயசிங்க, உட்பட லய்யன்ஸ் கழக பிரமுகர்கள் , மற்றும் விழிப்புணர்வற்றோர் சங்க அங்கத்தவர்கள் பலரும் கலநரதுகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் விழிப்புனர்வற்றோர் சங்க அங்கத்தவர்களுக்கு லயன்ஸ் கழகத்தினால் ஆடைகளும் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!