இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணைகள் இன்றுடன் நிறைவு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்படி, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்கத் தொடங்கியுள்ளது.
எவ்வாறாயினும் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.