கனகாம்பிகை குளம் வான் பாயும் அபாயம்: கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் விடுத்துள்ள வேண்டுகோள்
கிளிநொச்சிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இதன்காரணமாக கனகாம்பிகை குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் இரத்தினபுரம் ஆனந்தபுரம் மக்கள் மிக அவதானமாக இருப்பதுடன், வெள்ளம் ஏற்படாத வகையில் அருகில் உள்ள கழிவுக்கால்வாய்களை சுத்தம் செய்து நீர் வழிந்தோட கூடிய வகையில் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தற்போது கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் 9 அடி 3 அங்குலமாக காணப்படுகின்றதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியாக மழை பெய்யும் ஆக இருந்தால் கனகாம்பிகை குளம் வான் பாய்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதனால் பரந்தன் உமையாள்புரம் பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.