யாழ் - நீர்வேலியில் கசிப்பு காய்ச்சிய இருவர் இன்று கைது
Kanimoli
2 years ago
யாழ் - நீர்வேலியில் கசிப்பு காய்ச்சிய இருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்ட காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காய்ச்சிய போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்
40 வயதுடைய பெண்ணும் 35 வயதுடைய ஆணுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர். 20 லீட்டர் கசிப்பு, 50 லீட்டர் கோடா, கசிப்பு காய்ச்சிய உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
நீண்ட காலமாக இடம்பெற்ற கசிப்பு உற்பத்தி மற்றும் வியாபரம் முறியடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கோப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சான்றுப் பொருட்களும் பாரப்படுத்தப்பட்டுள்ளன.