இலங்கையின் உயர் பணவீக்க நிலைமை படிப்படியாக குறையும்
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள உயர் பணவீக்க நிலைமை படிப்படியாக குறையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்கா துனுசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் உயர்மட்ட பணவீக்கம் காணப்படுவதால், பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்பார்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த வருடமும் இலங்கையில் பணவீக்கம் 30 வீதமாக உயர் மட்டத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் காலங்களில் உலக சந்தையில் எரிபொருள் விலை ஓரளவு குறையும் எனினும் எரிபொருள் விலையில் துரிதமான குறைவை எதிர்பார்க்க முடியாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, செப்டெம்பர் மாதத்தில் 69.8 வீதமாக இருந்த பணவீக்க விகிதம் ஒக்டோபர் மாதத்தில் 66 வீதமாகக் குறைந்துள்ளது.