ஐ.எம்.எஃப் பிரதிநிதிகள்- இலங்கை அதிகாரிகள் இடையே நாளை பேச்சுவார்த்தை!
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதியமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று இணையவழி கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்துடன் நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கான தயார்படுத்தலாக இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கும் நிதி உறுதிப்பாடுகள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம் கொண்டு வரவுள்ள நிதிக் கொள்கையின் ஊடாக பொருட்களின் விலைகளை படிப்படியாகக் குறைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.